அஞ்சுகிராமம் அருகே துணிக்கடை பெண் ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை;மகள்கள் திருமணத்துக்கு வாங்கிய கடனை அடைக்க முடியாததால் விபரீதம்
அஞ்சுகிராமம் அருகே மகள்கள் திருமணத்துக்கு வாங்கிய கடனை அடைக்க முடியாததால் துணிக்கடை பெண் ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அஞ்சுகிராமம்,
அஞ்சுகிராமம் அருகே மகள்கள் திருமணத்துக்கு வாங்கிய கடனை அடைக்க முடியாததால் துணிக்கடை பெண் ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மகள்களுக்கு திருமணம்
அஞ்சுகிராமம் அருகே உள்ள மருங்கூர் கோட்டைவிளையை சேர்ந்தவர் பிச்சை. இவருடைய மனைவி பாக்கியம் (வயது 51). இவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு துணிக்கடையில் வேலை செய்து வந்தார். இவர்களுக்கு 3 மகள்கள், 2 மகன்கள் உள்ளனர்.
இதில் 2 மகள்களுக்கு திருமணம் ஆகி விட்டது. அதற்காக வாங்கிய கடனை அடைக்க முடியாமல் கணவனும்-மனைவியும் தவித்து வந்தனர்.
தூக்கில் தொங்கினார்
இந்தநிலையில் சம்பவத்தன்று கடனை அடைக்க முடியாதது தொடர்பாக கணவன்-மனைவி இடையே வாய் தகராறு ஏற்பட்டது. அப்போது வீட்டுக்குள் பாக்கியம் சென்று கதவை பூட்டிக்கொண்டார். சிறிது நேரம் ஆகியும் அவர் வெளியே வரவில்லை.
உடனே பிச்சை உறவினர்களின் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது வீட்டின் கூரையில் பாக்கியம் சேலையால் தூக்கு போட்டு ெதாங்கி கொண்டு இருந்தார். ஆபத்தான நிலையில் இருந்த அவரை மீட்டு நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இல்லாமல் பாக்கியம் நேற்று பரிதாபமாக இறந்தார்.
இதுபற்றி பிச்சை அஞ்சுகிராமம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கதிரேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.