கருணாநிதியின் நண்பர் தென்னனின் கொள்ளுப்பேத்திக்கு 'திராவிடச்செல்வி' என பெயர் சூட்டிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்


கருணாநிதியின் நண்பர் தென்னனின் கொள்ளுப்பேத்திக்கு திராவிடச்செல்வி என பெயர் சூட்டிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 22 Feb 2023 7:15 PM GMT (Updated: 22 Feb 2023 7:15 PM GMT)

கருணாநிதியின் நண்பர் தென்னனின் கொள்ளுப்பேத்திக்கு ‘திராவிடச்செல்வி’ என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெயர் சூட்டினார்.

திருவாரூர்

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் சொந்த ஊர் திருவாரூர் ஆகும். இதனால் அவருக்கு திருவாரூரில் நண்பர்கள் அதிகம். கருணாநிதியின் நெருங்கிய நண்பர்களில் ஒருவர் திருவாரூரை சேர்ந்த தென்னன் ஆவார். இவர் திருவாரூர் நகரசபை முன்னாள் தலைவர்.தென்னன்-சுந்தராம்பாள் தம்பதியரின் மகன் செல்வம். இவருடைய மகள் தைலா. இவருடைய கணவர் கபிலன். இவர்களுக்கு 3 மாத பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் 2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று முன்தினம் திருவாரூர் வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது தந்தை கருணாநிதியின் நண்பர் தென்னனின் கொள்ளுப்பேத்திக்கு 'திராவிடச்செல்வி' என பெயர் சூட்டினார். அப்போது தென்னன் குடும்பத்தினர் உடன் இருந்தனர்.


Next Story