"தண்ணீர் பற்றாக்குறைக்கு முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுப்பார்" - அமைச்சர் கே.என்.நேரு பேட்டி


தண்ணீர் பற்றாக்குறைக்கு முதல்-அமைச்சர்  நடவடிக்கை எடுப்பார் - அமைச்சர் கே.என்.நேரு பேட்டி
x

டெல்டா மாவட்ட குறுவை பாசனத்திற்கு தண்ணீர் பற்றாக்குறை வராத அளவுக்கு முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுப்பார் .இவ்வாறு அவர் கூறினார்.

தஞ்சாவூர்,

இது குறித்து அமைச்சர் கே.என். நேரு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது ,

டெல்டா மாவட்ட குறுவை பாசனத்திற்கு தண்ணீர் பற்றாக்குறை வராத அளவுக்கு முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுப்பார் . இன்றைய தினம் அணைக்கு 4500 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. தமிழகத்திற்கு வரவேண்டிய உரிய தண்ணீரை பெற முதல்-அமைச்சர் உத்தரவின் பேரில் டெல்லிக்கு தமிழக நீர்வளத்துறை அமைச்சர் சென்று சம்பந்தப்பட்ட அமைச்சரை சந்தித்து பேசி இருக்கிறார்.

மேகதாதுவில் கட்டாயம் அணைகட்ட விடமாட்டோம் என்ற நிலைப்பாட்டில் முதல் -அமைச்சர் மிக உறுதியாக உள்ளார். ரூ.14 ஆயிரம் கோடியில் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் பணிகள் தொடங்கியுள்ளது. 24 மாதத்திற்குள் பணிகள் முடிவடைய அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்னதாகவே பணிகள் முடிவடைந்து விடும்.

இவ்வாறு அவர் கூறினார்



Next Story