கூட்டுறவு வங்கி ஊழியர்கள் தர்ணா
நெல்லையில் கூட்டுறவு வங்கி ஊழியர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.
திருநெல்வேலி
தமிழ்நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்கள் சங்கம் சார்பில் நெல்லை வண்ணார்பேட்டை தலைமை அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடைபெற்றது. கூட்டுறவு வங்கி ஊழியர்களின் சம்பள உயர்வு கோரிக்கை சாசனங்கள் மீது உடனடியாக பேச்சுவார்த்தை தொடங்க வேண்டும். கூட்டுறவு வங்கிகளில் உயர் பதவிகளை முறையான பதவி உயர்வு மூலம் நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு கணேசன் தலைமை தாங்கினார். குப்புசாமி, பாலமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஏ.ஐ.டி.யு.சி. ரெங்கன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். சண்முகசுந்தரம், மெய்கண்டன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள். இதில் சங்கர சதாசிவம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story