ரூ.97 லட்சம் மோசடி புகாரில் கூட்டுறவு வங்கி பெண் மேலாளர் பணியிடை நீக்கம்


ரூ.97 லட்சம் மோசடி புகாரில் கூட்டுறவு வங்கி பெண் மேலாளர் பணியிடை நீக்கம்
x

ரூ.97 லட்சம் மோசடி புகாரில் கூட்டுறவு வங்கி பெண் மேலாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

வேலூர்

வேலூர்

ரூ.97 லட்சம் மோசடி புகாரில் கூட்டுறவு வங்கி பெண் மேலாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

வேலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் கிளை குடியாத்தத்தில் உள்ளது. இங்கு மேலாளராக பணியாற்றி வந்தவர் உமாமகேஸ்வரி (வயது 38). இவர் தற்போது வேலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் மேலாளராக பணியாற்றி வருகிறார்.

இவர் குடியாத்தத்தில் பணியாற்றிய காலக்கட்டத்தில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்கியதாக போலி ஆவணங்கள் தயாரித்து ரூ.97 லட்சத்து 37 ஆயிரம் மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் தணிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதில் பணமோசடி செய்யப்பட்டதாக துறை அதிகாரிகளுக்கு தெரியவந்தது.

இதுகுறித்து வேலூர் மாவட்ட வணிக குற்றப்புலனாய்வு பிரிவு போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி வழக்குப்பதிவு செய்து உமாமகேஸ்வரியை கைது செய்தார். இந்த நிலையில் அவர் மீது துறைரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அவரை பணியிடை நீக்கம் செய்துள்ளதாக கூட்டுறவு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

----



Next Story