விடுப்பு எடுத்து கூட்டுறவுத்துறை ஊழியர்கள் போராட்டம்
தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கம் சார்பில் மாநிலம் முழுவதும் செயல்படும் கூட்டுறவுத்துறை அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்கள் நேற்று முன்தினம் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டம் நடத்தினர்.
தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கம் சார்பில் மாநிலம் முழுவதும் செயல்படும் கூட்டுறவுத்துறை அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்கள் நேற்று முன்தினம் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டம் நடத்தினர். செங்கல்பட்டு வீட்டு வசதித்துறை துணை பதிவாளரை பணி நீக்கம் செய்ய வேண்டும். பால் கூட்டுறவுத்துறை மற்றும் வீட்டு வசதித்துறையில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் ஊழியர்களை உடனே தாய்த்துறைக்கு விடுவிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது. திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை மாவட்டத்தில் செயல்படும் மண்டல இணை பதிவாளர் அலுவலகம், துணை பதிவாளர் அலுவலகம், பழனி-திண்டுக்கல் அலுவலகம் ஆகியவற்றில் பணியாற்றும் 50-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் நேற்று முன்தினம் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த அலுவலகங்கள் வெறிச்சோடின, பணிகளும் பாதிக்கப்பட்டன.