ஊட்டியில் கூட்டுறவு சங்க பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்


ஊட்டியில் கூட்டுறவு சங்க பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 4 April 2023 12:15 AM IST (Updated: 4 April 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டியில் கூட்டுறவு சங்க பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நீலகிரி

ஊட்டி,

பயிர் கடன், நகைக்கடன் மற்றும் மகளிர் குழு கடன் தள்ளுபடிக்கு உரிய தொகையை வட்டியுடன் வழங்க வேண்டும், ரேஷன் கடை பணியாளர்களின் பிரச்சினைகளை கண்டறிய குழு அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட 12 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி முதல்-அமைச்சர் கவனத்தை ஈர்க்கும் வகையில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் ஊட்டி பிங்கர்போஸ்ட்டில் உள்ள கூட்டுறவு இணை பதிவாளர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு நீலகிரி மாவட்ட செயலாளர் நாகராஜ் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கடன் தள்ளுபடியில் விதிமீறல், நகை ஏல நடவடிக்கையில் நஷ்டம் என்று கூறி பணியாளர்கள், செயலாளர் பொதுப்பணி நிலைத்திறன் அமைப்பில் கோரிக்கைகளை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என கோஷங்கள் எழுப்பி வலியுறுத்தினர். இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.


Next Story