குமார சுப்பிரமணிய சாமி கோவிலில் கோபூஜை


குமார சுப்பிரமணிய சாமி கோவிலில் கோபூஜை
x

லக்காபுரம் குமார சுப்பிரமணிய சாமி கோவிலில் கோபூஜை நடந்தது.

ஈரோடு

சோலார்

மொடக்குறிச்சி அருகே லக்காபுரத்தில் பிரசித்தி பெற்ற குமார சுப்பிரமணிய சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் கந்த சஷ்டி சூரசம்காரம் மற்றும் திருக்கல்யாண உற்சவ நிகழ்ச்சி கடந்த 25-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து கோவிலில் யாகசாலை மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. நேற்று முன்தினம் கோபூஜையும், சிவனடியார் சொற்பொழிவு நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) சூரசம்ஹாரம் நிகழ்ச்சியும், திருமலையை சுற்றி வந்து சாமிக்கு சிறப்பு பூஜையும் நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. நாளை (திங்கட்கிழமை) சாமிக்கு திருக்கல்யாண உற்சவ நிகழ்ச்சி மற்றும் அன்னதானம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினரும் மற்றும் ஊர் பொதுமக்களும் செய்து வருகின்றனர்.


Related Tags :
Next Story