மத்திய அரசு பணி போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி


மத்திய அரசு பணி போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி
x

மத்திய அரசு பணி போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி

மயிலாடுதுறை

குத்தாலம்:

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பேரூராட்சி அலுவலகத்தில் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில் மத்திய அரசின் 11 ஆயிரத்து 409 பணியிடங்களுக்கான தமிழ் வழி போட்டி தேர்வுக்கான ஆலோசனை மற்றும் பயிற்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு பேரூராட்சி மன்ற தலைவர் சங்கீதா மாரியப்பன் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் பழனிவேல் கலந்து கொண்டு தேர்வு தொடர்பான ஆலோசனைகளை வழங்கினார். இதில் பல்வேறு கிராமங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தேர்வு தொடர்பான சந்தேகங்கள் மற்றும் விண்ணப்பிக்கும் முறைகள் குறித்து கேட்டறிந்தனர். இதற்கான ஏற்பாடுகளை குத்தாலம் பேரூராட்சி செயல் அலுவலர் ரஞ்சித் செய்திருந்தார். முடிவில் பேரூராட்சி இளநிலை உதவியாளர் சுந்தர் நன்றி கூறினார்.


Next Story