ராணிப்பேட்டை மாவட்டத்தில் போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி
ராணிப்பேட்டை மாவட்டத்தில் போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தால் அறிவிக்கப்பட்ட இரண்டாம் நிலை காவலர் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பித்த ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் வருகிற 1-ந் தேதி (திங்கட்கிழமை) தொடங்கப்பட உள்ளது.
இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விரும்பும் ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த விண்ணப்பதாரர்கள்அலுவலக வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நேரிலோ அல்லது தொலைபேசி எண் 04172-291400 வாயிலாகவோ தங்களது விருப்பத்தினை செல்போன் எண்ணுடன் தெரிவிக்கலாம். மேலும் ranipetjobfair@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு பயன் பெறலாம்.
மேலும் மத்திய மாநில அரசு பணியிடங்களுக்கான பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் கிராமப்புற மற்றும் நகர்ப்புற மாணவர்கள் பயன்பெறும் வகையில் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் பிரத்தியேக https://tamilnaducareerservices.tn.gov.in என்ற இணையதளத்தில் மென் பாட குறிப்புகள், மாதிரி வினாத்தாள்கள் மற்றும் மாதிரி தேர்வுகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. எனவே போட்டித் தேர்வுக்கு தயாராகும் ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த அனைத்து மாணவர்களும் தங்களது விவரங்களை பதிவேற்றம் செய்து பயன்பெறலாம்.
இந்த தகவலை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்தார்.