கடலோர காவல்படை ஏட்டு வீட்டில் கொள்ளையடித்த 2 பேர் கைது


கடலோர காவல்படை ஏட்டு வீட்டில் கொள்ளையடித்த 2 பேர் கைது
x

வள்ளியூரில் கடலோர காவல்படை ஏட்டு வீட்டில் கொள்ளையடித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 26 பவுன் நகை மீட்கப்பட்டது.

திருநெல்வேலி

வள்ளியூர் (தெற்கு):

வள்ளியூரில் கடலோர காவல்படை ஏட்டு வீட்டில் கொள்ளையடித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 26 பவுன் நகை மீட்கப்பட்டது.

கடலோர காவல்படை ஏட்டு

கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டியைச் சேர்ந்தவர் அருண்குமார் (வயது 45). இவர் நெல்லை மாவட்டம் கூடங்குளம் கடலோர காவல் படையில் ஏட்டுவாக பணியாற்றி வருகிறார். இதற்காக வள்ளியூர் புறவழிச்சாலை பசும்பொன் நகரில் வாடகை வீட்டில் குடியிருந்து வருகிறார்.

தனது சொந்த ஊரான பூதப்பாண்டியில் நடைெபற்ற கோவில் கொடை விழாவுக்கு அருண்குமார் தனது குடும்பத்துடன் சென்றுவிட்டார். பின்னர் கடந்த மாதம் 14-ந் தேதி மாலையில் வீட்டிற்கு வந்தபோது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது.

உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் உள்ள பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த தங்க வளையல், சங்கிலி, கம்மல் உள்ளிட்ட 45 பவுன் நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இதுதொடர்பாக அருண்குமார் வள்ளியூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

2 பேர் கைது

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து வீட்டின் முன்பிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். மேலும் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன் தலைமையிலான தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். இதில் வேலூர் கொசபேட்டை பகுதியைச் சேர்ந்த அன்வர் மகன் ஷக்கின் (35), வாணியம்பாடி சென்னம்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஜாவித் பாட்ஷா மகன் அஸ்கர் அலி (27) ஆகியோர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் விரைந்து சென்று, 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 26 பவுன் நகை மீட்கப்பட்டது.


Next Story