அகழாய்வில் அரவை கற்கள்
அகழாய்வில் அரவை கற்கள் கண்டெடுக்கப்பட்டது.
விருதுநகர்
தாயில்பட்டி,
வெம்பக்கோட்டை அருகே உள்ள விஜயகரிசல்குளத்தில் நடைபெற்று வரும் 2-ம் கட்ட அகழாய்வில் தொடர்ந்து ஏராளமான பண்டைய காலத்தில் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டு வருகின்றன. நேற்று தோண்டப்பட்ட அகழாய்வு குழியில் சங்கு வளையல்களை மெருகூட்டுவதற்காக பயன்படுத்தப்பட்ட மெருகூட்டும் கற்கள் மற்றும் அரவை கற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. புது வீடு கட்டப்பட்டு வீட்டின் மையத்தின் தரைதளத்தில் உள்ள மேடுபள்ளத்தை சரி செய்வதற்காக பயன்படுத்தப்பட்ட கற்கள் அதிக அளவில் கிடைத்துள்ளன. தொடர்ந்து ஏராளமான பாசிமணிகள், சங்கு வளையல்கள் செய்ய பயன்படுத்தப்பட்ட கருவிகள், மண்பாண்ட ஓடுகள், தொடர்ந்து கிடைத்து வருகின்றன. இதுவரை 3,300 பொருட்கள் கிடைத்துள்ளதாக தொல்லியல் துறையினர் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story