ரூ.62¼ லட்சத்திற்கு தேங்காய் பருப்பு ஏலம்


ரூ.62¼ லட்சத்திற்கு தேங்காய் பருப்பு ஏலம்
x
திருப்பூர்


வெள்ளகோவில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரம்தோறும் செவ்வாய்க்கிழமை தேங்காய் பருப்பு வியாழக்கிழமை சூரியகாந்தி விதை ஏலம் நடைபெறும்,

இந்த ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு வாணியம்பாடி, மூலனூர், கரூர், ஸ்ரீரங்கம், திருச்சி பகுதி விவசாயிகள் தேங்காய் பருப்பு மற்றும் சூரியகாந்தி விதை விற்பனைக்கு கொண்டு வருவார்கள். தீபாவளி பண்டிகையொட்டி தேங்காய் பருப்பு ஏலம் நேற்று நடைபெற்றது. இதில் 191 விவசாயிகள் கலந்து கொண்டு 93 ஆயிரத்து 118 கிலோ தேங்காய் பருப்பு விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில் வெள்ளகோவில், காங்கயம், முத்தூர், ஊத்துக்குளி பகுதியைச் சேர்ந்த 15வியாபாரிகள் ஒரு கிலோ தேங்காய் பருப்பு அதிகபட்சமாக ரூ.76.65-க்கும், குறைந்தபட்சம் ரூ.54-க்கும் கொள்முதல் செய்தனர். மொத்த ரூ.62லட்சத்து 39ஆயிரத்து 823-க்கு வணிகம் நடைபெற்றது. இத்தகவலை வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் சி.மகுடேஸ்வரன் தெரிவித்தார்.


Next Story