ரூ.40ஆயிரத்திற்கு தேங்காய் பருப்பு ஏலம்


ரூ.40ஆயிரத்திற்கு தேங்காய் பருப்பு ஏலம்
x

ரூ.40ஆயிரத்திற்கு தேங்காய் பருப்பு ஏலம்

திருப்பூர்

காங்கயம்,

காங்கயத்தில் கரூர் சாலை பகுதியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் தேங்காய் பருப்பு மறைமுக ஏல முறையில் விற்பனை நடைபெற்றது. இதில் காங்கயம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த 2 விவசாயிகள் 13 மூட்டைகள் (569 கிலோ) தேங்காய் பருப்பினை (கொப்பரை) விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

இதில் காங்கயம், வெள்ளகோவில், முத்தூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 4 வியாபாரிகள் தேங்காய் பருப்புகளை வாங்க வந்திருந்தனர். இங்கு நடந்த ஏலத்தில் ரூ.40 ஆயிரத்திற்கு பருப்புகள் விற்பனையானது. தேங்காய் பருப்பு அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ.82-க்கும், குறைந்தபட்சமாக ரூ.68-க்கும், சராசரியாக ரூ.80-க்கும் ஏலம் போனது. ஏலத்திற்கான ஏற்பாடுகளை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் ஆர்.மாரியப்பன் செய்திருந்தார்.

----


Related Tags :
Next Story