ரூ.5½ லட்சத்திற்கு தேங்காய் பருப்பு ஏலம்
திருப்பூர்
காங்கயம்
காங்கயம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் பருப்பு மறைமுக ஏல முறையில் விற்பனை நடைபெற்றது. இதில் காங்கயம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த 5 விவசாயிகள் 130 மூட்டைகள் (6,656 கிலோ) தேங்காய் பருப்பினை (கொப்பரை) விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
இதில் காங்கயம், வெள்ளகோவில், முத்தூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 3 வியாபாரிகள் தேங்காய் பருப்புகளை வாங்க வந்திருந்தனர். இங்கு நடைபெற்ற ஏலத்தில் ரூ.5 லட்சத்து 51 ஆயிரத்துக்கு பருப்புகள் விற்பனையானது. தேங்காய் பருப்பு அதிக பட்சமாக ஒரு கிலோ ரூ.84-க்கும், குறைந்த பட்சமாக ரூ.71-க்கும் ஏலம் போனது. இந்த தகவலை கண்காணிப்பாளர் ஆர்.மாரியப்பன் தெரிவித்தார்.
Next Story