ரூ.61 லட்சத்திற்கு தேங்காய் பருப்பு ஏலம்
வெள்ளகோவில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரம்தோறும் செவ்வாய்க்கிழமை தேங்காய் பருப்பு வியாழக்கிழமை சூரியகாந்தி விதை ஏலம் நடைபெறும்.இந்த ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு வாணியம்பாடி, மூலனூர், கரூர், ஸ்ரீரங்கம், திருச்சி பகுதி விவசாயிகள் தேங்காய் பருப்பு மற்றும் சூரியகாந்தி விதை விற்பனைக்கு கொண்டு வருவார்கள். இந்த நிலையில் நேற்று நடந்த ஏலத்ில் 157 விவசாயிகள், 77ஆயிரத்து 886 கிலோ தேங்காய் பருப்பு விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில், வெள்ளகோவில், காங்கயம், முத்தூர், ஊத்துக்குளி பகுதியைச் சேர்ந்த 15 வியாபாரிகள் ஒரு கிலோ தேங்காய் பருப்பு அதிகபட்சமாக ரூ.90.40-க்கும், குறைந்தபட்சம் ரூ.64.65-க்கும் கொள்முதல் செய்தனர். மொத்தம் ரூ.61லட்சத்து 9ஆயிரத்து 438-க்கு வணிகம் நடைபெற்றது. இந்த தகவலை வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் மகுடேஸ்வரன் தெரிவித்தார்.
----------