வீடுகளுக்கு தென்னங்கன்றுகள் வினியோகம்


வீடுகளுக்கு தென்னங்கன்றுகள் வினியோகம்
x

வீடுகளுக்கு தென்னங்கன்றுகள் வினியோகம்

திருப்பூர்

போடிப்பட்டி

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் வேளாண்மை உழவர் நலத்துறை மூலம் வீடுகள் தோறும் தென்னை நாற்றுக்கள் வழங்கப்பட்டு வருகிறது.அதன் ஒரு பகுதியாக நேற்று உடுமலையை அடுத்த மொடக்குப்பட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உதவி வேளாண்மை அலுவலர் வைரமுத்து, கிராம நிர்வாக அலுவலர் மயில்சாமி, கூட்டுறவுத்துறை செயலாளர் முத்துக்குமார் மற்றும் கால்நடை மருத்துவர் ராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், கோவை மற்றும் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் குடுமியான்மலை சேர்ந்த மாணவ மாணவிகள் தென்னை நாற்று நடவு மற்றும் பராமரிப்பு குறித்து பொதுமக்களுக்கு விளக்கிக் கூறினர்.



Next Story