பரமத்திவேலூரில் ரூ.1½ லட்சத்துக்கு தேங்காய் ஏலம்


பரமத்திவேலூரில் ரூ.1½ லட்சத்துக்கு தேங்காய் ஏலம்
x
தினத்தந்தி 10 May 2023 12:15 AM IST (Updated: 10 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon
நாமக்கல்

பரமத்திவேலூர்:

பரமத்திவேலூர் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமைகளில் தேங்காய் ஏலம் நடந்து வருகிறது. கடந்த வாரம் நடந்த ஏலத்துக்கு 7 ஆயிரத்து 912 கிலோ தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்தனர். இதில் ஒரு கிலோ தேங்காய் அதிகபட்சமாக ரூ.24.82-க்கும், குறைந்தபட்சமாக ரூ.20-க்கும், சராசரியாக ரூ.23.50-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.1 லட்சத்து 88 ஆயிரத்து 552-க்கு ஏலம் நடைபெற்றது. நேற்று நடைபெற்ற ஏலத்திற்கு 6 ஆயிரத்து 548 கிலோ தேங்காய் கொண்டு வரப்பட்டன. இதில் அதிகபட்சமாக ஒரு கிலோ தேங்காய் ரூ.24.25-க்கும், குறைந்தபட்சமாக ரூ.18.20-க்கும், சராசரியாக ரூ.23.20-க்கும் விற்பனையானது. மொத்தம் ரூ.1 லட்சத்து 49 ஆயிரத்து 839-க்கு தேங்காய் வர்த்தகம் நடந்தது.


Next Story