ஒடுகத்தூர் பேரூராட்சியில் ரூ.3.57 லட்சத்துக்கு தென்னை, புளியமரங்கள் ஏலம்
ஒடுகத்தூர் பேரூராட்சியில் ரூ.3.57 லட்சத்துக்கு தென்னை, புளியமரங்கள் ஏலம் விடப்பட்டன.
அணைக்கட்டு
ஒடுகத்தூர் பேரூராட்சியில் ரூ.3.57 லட்சத்துக்கு தென்னை, புளியமரங்கள் ஏலம் விடப்பட்டன.
ஒடுகத்தூர் பேரூராட்சியில் 97 புளிய மரங்கள், 18 தென்னை மரங்கள், கட்டண கழிவறை, பஸ் நிலைய சுங்க வசூல், தினசரி சந்தை ஆகியவைகளுக்கு ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் இறுதியில் ஏலம் விடும் நிகழ்ச்சி நடப்பது வழக்கம்.
அதன்படி 2023-24ம் ஆண்டுக்கான ஏலம் நேற்று பேரூராட்சி அலுவலகத்தில் நடந்தது. ஒடுகத்தூர் பேரூராட்சி செயல் அலுவலர் உமாராணி தலைமை தாங்கினார். பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் ரேணுகாதேவி பெருமாள்ராஜ் முன்னிலை வகித்தார். காலை 11 மணிக்கு ஏலம் விடப்பட்டது. அதில் 30-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
அதில் புளிய மரங்கள் ரூ.33 ஆயிரத்து 300-க்கும், தென்னை மரங்கள் ரூ.4 ஆயிரத்து 900-க்கும், பஸ் நிலைய சுங்க வசூல் ரூ.1 லட்சத்து 33 ஆயிரத்து 300-க்கும், கட்டண கழிவறை ரூ.1 லட்சத்து 85 ஆயிரத்து 500-என மொத்தம் ரூ.3 லட்சத்து 57 ஆயிரத்துக்கு ஏலம் விடப்பட்டது.
அதேபோல் தினசரி சந்தை சுங்க வசூல் குறைந்த தொகைக்கு ஏலம் கேட்டதால், அதை மறு தேதி அறிவிப்பின்றி ஒத்தி வைக்கப்பட்டது