பரமத்திவேலூரில் ரூ.13 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம்
பரமத்திவேலூரில் ரூ.13 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம் நடந்தது.
பரமத்திவேலூர்:
பரமத்திவேலூர் வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமைகளில் தேய்காய் பருப்பு ஏலம் விடப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்திற்கு 22 ஆயிரத்து 126 கிலோ தேங்காய் பருப்பை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இதில் அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ.85.90-க்கும், குறைந்தபட்சமாக ஒரு கிலோ ரூ.67.01-க்கும், சராசரியாக ஒரு கிலோ ரூ.85.90-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.17 லட்சத்து 49 ஆயிரத்து 983-க்கு வர்த்தகம் நடைபெற்றது. நேற்று நடைபெற்ற ஏலத்திற்கு 16 ஆயிரத்து 682 கிலோ தேங்காய் பருப்பை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இதில் அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ.84.09-க்கும், குறைந்த பட்சமாக ஒரு கிலோ ரூ.67-க்கும், சராசரியாக ஒரு கிலோ ரூ.83.79-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.13 லட்சத்து ஆயிரத்து 613-க்கு வர்த்தகம் நடைபெற்றது.