ரூ.7 லட்சத்துக்கு தேங்காய் ஏலம்
உத்தமசோழபுரத்தில் ரூ.7 லட்சத்துக்கு தேங்காய் ஏலம் நடந்தது.
சேலம்
]பனமரத்துப்பட்டி:
சேலம் அருகே உத்தமசோழபுரத்தில் உள்ள சேலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை தேங்காய் மறைமுக ஏலம் வேளாண்மை துணை இயக்குனரும், முதுநிலை செயலாளர் கண்ணன் தலைமையில் நடைபெற்றது. இதில் 57 விவசாயிகளும், சேலம், திருப்பூர் ஆகிய பகுதிகளில் இருந்து வியாபாரிகளும் கலந்து கொண்டனர்.
கொப்பரை தேங்காய் கிலோ குறைந்தபட்சமாக ரூ 40.99-க்கும், அதிகபட்சமாக ரூ84.50-க்கும் விற்பனையானது. மொத்தம் 8¾ டன் கொப்பரை தேங்காய் ரூ.7 லட்சத்து ஏலம் போனதாக ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் பிரபாவதி தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story