தென்னை சாகுபடி மேலாண்மை பயிற்சி


தென்னை சாகுபடி மேலாண்மை பயிற்சி
x

வேளாண்மை அலுவலர்களுக்கு தென்னை சாகுபடி மேலாண்மை பயிற்சி வேப்பங்குளத்தில் நடந்தது

தஞ்சாவூர்

பட்டுக்கோட்டை:

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள மாநில தென்னை நாற்றங்கால் மற்றும் தென்னை ஒட்டுப்பணி மைய வேளாண்மை அலுவலர்கள், உதவி வேளாண்மை அலுவலர்களுக்கான தென்னை சாகுபடி மேலாண்மை பயிற்சி, தென்னை ஒட்டு சேர்ப்பு தொழில்நுட்ப பயிற்சி வேப்பங்குளம் தென்னை ஆராய்ச்சி நிலையத்தில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பட்டுக்கோட்டை வேளாண்மை உதவி இயக்குனர் மாலதி வரவேற்றார். தஞ்சாவூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் ந.க.நல்லமுத்துராஜா தலைமை தாங்கினார். பயிற்சியை பற்றி வேளாண்மை துணை இயக்குனர் (தென்னை) சித்ரா விளக்கி பேசினார்.மேலும் இந்த பயிற்சிக்கான ஏற்பாடுகளை வேப்பங்குளம் தென்னை ஆராய்ச்சி நிலைய தலைவர் மற்றும் பேராசிரியர் பாபு மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர். இந்த பயிற்சியில் .தாய்மரத் தேர்வு, பயிர் மரபியல் மற்றும் தென்னை நாற்று உற்பத்தி குறித்து தோட்டக்கலை இணை பேராசிரியர் அருண்குமார் பேசினார். தென்னையில் பூச்சி மேலாண்மை குறித்து பூச்சியியல் துறை இணை பேராசிரியர் மதிராஜன், தென்னையில் நோய் மேலாண்மை குறித்து நோயியல் துறை உதவி பேராசிரியர் சுருளிராஜன், கள ஆய்வு மற்றும் தொழில்நுட்ப செயல் விளக்கங்கள் போன்றவை குறித்து தோட்டக்கலை இணை பேராசிரியர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் பேசினர். மரபியல் துறை இணை பேராசிரியர் சித்ரா அனைத்து அலுவலர்களுக்கும் பயிற்சி அளித்தார்.


Next Story