தென்னையில் நோய் தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்


தென்னையில் நோய் தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்
x

தென்னையில் நோய் தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து வேளாண் அதிகாரிகள் செயல் விளக்கம் அளித்தனர்.

தஞ்சாவூர்

தென்னையில் நோய் தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து வேளாண் அதிகாரிகள் செயல் விளக்கம் அளித்தனர்.

தென்னையில் பூச்சி தாக்குதல்

தென்னையை தாக்கும் பூச்சி மற்றும் நோய்களின் பாதிப்பு தற்போது அதிகரித்துள்ளது. இதையொட்டி விவசாயிகளுக்கு நோய் தாக்குதலை கட்டுப்படுத்தும் பரிந்துரைகள் மற்றும் செயல் விளக்கங்கள் செய்து காண்பிக்கும் பொருட்டு பட்டுக்கோட்டை அருகே சூரப்பள்ளம் கிராமத்தில் சிறப்பு வயலாய்வு முகாம் நடந்தது.

முகாமில் தஞ்சை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் நல்லமுத்துராஜா, வேப்பங்குளம் தென்னை ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் மற்றும் தலைவர் பாபு, பட்டுக்கோட்டை வேளாண்மை ஆராய்ச்சி நிலைய இணை பேராசிரியர் சித்ரா, சூரப்பள்ளம் ஊராட்சி மன்ற தலைவர் தங்கம், துணைத்தலைவர் மணிவேல், ஊராட்சி மன்ற உறுப்பினர் லதா மற்றும் பல்வேறு கிராமங்களில் இருந்து 60-க்கும் மேற்பட்ட தென்னை சாகுபடி செய்யும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

சிவப்புக்கூன் வண்டு

நிகழ்ச்சியில் பட்டுக்கோட்டை வேளாண்மை உதவி இயக்குனர் மாலதி வரவேற்று பேசினார். இதில் தென்னையைத் தாக்கும் காண்டாமிருக வண்டு, சிவப்புக்கூன்வண்டு, ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ மற்றும் வாடல் நோய் போன்றவற்றிற்கான அறிகுறிகள் மற்றும் அதனை சரி செய்வதற்கான மேலாண்மை முறைகள் பற்றி விவசாயிகளுக்கு வேளாண் அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.

முகாமையொட்டி தென்னையில் உர மேலாண்மை, நுண்சத்து இடுதல், காண்டாமிருக வண்டு மற்றும் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ மேலாண்மை முறைகள் குறித்த செயல் விளக்கங்கள் மற்றும் கருத்து கண்காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தது. இந்த செயல்விளக்கங்கள் மற்றும் முகாம் ஏற்பாடுகளை வேளாண்மை அலுவலர்கள் அப்சரா, சன்மதி, விதை ஆய்வாளர் நவீன், உதவி வேளாண்மை அலுவலர் ஜெயபாரதி, பட்டுக்கோட்டை வட்டார உதவி வேளாண்மை அலுவலர்கள் மற்றும் வட்டார தொழில்நுட்ப மேலாளர் முருகானந்தம் ஆகியோர் செய்திருந்தனர். முடிவில் தோட்டக்கலை அலுவலர் பிருந்தா நன்றி கூறினார்.


Next Story