தேங்காய் பருப்பு கொள்முதல் தொடக்கம்


தேங்காய் பருப்பு கொள்முதல் தொடக்கம்
x

வாழப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் பருப்பு கொள்முதல் தொடங்கியது.

சேலம்

வாழப்பாடி

வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின், சேலம் விற்பனைக்குழு, வாழப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மத்திய அரசின் குறைந்தபட்ச ஆதார விலை திட்டத்தின் கீழ் தேங்காய் பருப்பு (கொப்பரை தேங்காய்) கொள்முதல் தொடங்கப்பட்டுள்ளது. ஒரு கிலோவிற்கு ரூ.108.60 என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் வருகிற செப்டம்பர் மாதம் வரை செயல்பட உள்ளது. இதுவரை 54 விவசாயிகளிடம் இருந்து 37 டன் தேங்காய் பருப்பு கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது. இத்திட்டத்தின் கீழ் தேங்காய் பருப்புகளை விற்பனை செய்ய விவசாயிகள் பட்டா, அடங்கல், ஆதார் மற்றும் வங்கி கணக்கு புத்தக நகல் ஆகியவற்றுடன் வந்து பதிவு செய்து கொள்ளலாம் என விற்பனை கூட கண்காணிப்பாளர் பிரபாவதி தெரிவித்தார்.


Next Story