விவசாயிகளுக்கு தென்னை மரக்கன்றுகள் வழங்கும் விழா
களஞ்சேரி ஊராட்சியில் விவசாயிகளுக்கு தென்னை மரக்கன்றுகள் வழங்கும் விழா நடந்தது.
அம்மாப்பேட்டை;
தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டை ஒன்றியம், களஞ்சேரி ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் 2-ன் கீழ் ஊராட்சியை சேர்ந்த விவசாயிகளுக்கு தென்னை மரக்கன்றுகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர் கண்ணன் தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு துணைத் தலைவர் தங்கமணி சுரேஷ், ஒன்றியக்குழு உறுப்பினர் ஸ்ரீ வள்ளி விவேகானந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைத் தலைவர் மல்லிகா வரவேற்றார். நிகழ்ச்சியில் அம்மாப்பேட்டை ஒன்றியக்குழு தலைவர் கலைச்செல்வன் கலந்து கொண்டு ஊராட்சியை சேர்ந்த 300 வேளாண் குடும்பங்களுக்கு தலா 2 மரக்கன்றுகள் வீதம் 600 தென்னங்கன்றுகளை வழங்கி பேசினார். நிகழ்ச்சியில் வேளாண் துறை அலுவலர்கள் மனோகரன், ஆறுமுகம், விஜயகுமார், பிரதீபா, கிராம நிர்வாக அலுவலர் சூரியகுமார் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற அலுவலர்கள், பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலாளர் மாரிமுத்து நன்றி கூறினார்.