சிறுவங்கூரில்அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள்
சிறுவங்கூரில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி அருகே சிறுவங்கூர் ஊராட்சியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் வேளாண்மை துறை சார்பில் விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதற்கு ஊராட்சிமன்ற தலைவர் சந்திராசுந்தரம் தலைமை தாங்கினார். வேளாண்மை அலுவலர்கள் பழனிசாமி, அமிர்தலிங்கம், சிவா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கொளஞ்சி வரவேற்றார்.
நிகழ்ச்சியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் வேளாண்மை துறை சார்பில் 300 விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகளை ஊராட்சி மன்ற தலைவர் சந்திரா சுந்தரம் வழங்கினார்.
இதில் தி.மு.க. தகவல் தொழில் நுட்ப அணி மாவட்ட நிர்வாகி பிரகாஷ், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் முருகன், திலகம் ரங்கநாதன், மதியழகி ராமு, தனக்கோடிஜெயராமன், சுமதி மகேந்திரன், இமயவரம்பன், பொன்னம்மாள் சக்கரவர்த்தி, சம்பத்ராஜன் மற்றும் விவசாயிகள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.