மின்னல் தாக்கியதில் தென்னை மரம் சேதம்
மின்னல் தாக்கியதில் தென்னை மரம் சேதம் அடைந்தது.
அரியலூர்
அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி பகுதியில் நேற்று மாலை 5 மணியளவில் திடீரென மழை பெய்தது. சுமார் 1 மணி நேரம் தொடர்ந்து பெய்த இந்த மழையின் போது காற்று, இடி, மின்னல் ஏற்பட்டது. இதில் காடுவெட்டி வடக்கு தெருவில் உள்ள கிருஷ்ணமூர்த்தி மனைவி அரசிளங்குமாரி (வயது 45) என்பவரின் வீட்டின் முன்பு இருந்த தென்னை மரத்தில் பயங்கர சத்தத்துடன் மின்னல் தாக்கியது. இதில் தென்னை மரம் சேதம் அடைந்தது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதேபோல் மீன்சுருட்டி, பாப்பாக்குடி, காடுவெட்டி, இறவாங்குடி, ஜெயங்கொண்டம் குறுக்கு ரோடு உள்ளிட்ட பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்தது.
Related Tags :
Next Story