விவசாயிகளுக்கு இலவசமாக தென்னங்கன்றுகள் வினியோகம்


விவசாயிகளுக்கு இலவசமாக தென்னங்கன்றுகள் வினியோகம்
x

கபிஸ்தலம் அருகே விவசாயிகளுக்கு இலவசமாக தென்னங்கன்றுகள் வினியோகம் செய்யப்பட்டன.

தஞ்சாவூர்

கபிஸ்தலம்;

பாபநாசம் வட்டாரத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஈச்சங்குடி, சூலமங்கலம், ராஜகிரி, மேல கபிஸ்தலம் ஆகிய கலைஞர் திட்ட கிராமங்களை சேர்ந்த குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவசமாக தென்னங்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சூலமங்கலம் ஊராட்சி தலைவர் துரைராஜ், ஈச்சங்குடி ஊராட்சி தலைவர் பத்மாவதி மாரிமுத்து, ஆகியோர் முன்னிலை வகித்தனர். தென்னங்கன்றுகளை பாபநாசம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் நாசர் விவசாயிகளுக்கு வழங்கினார். அப்போது அவர், கலைஞர் திட்ட கிராமங்களில் தென்னங்கன்றுகளை இலவசமாக பெற விரும்பும் குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், செல்போன் எண் ஆகியவற்றுடன் ஊராட்சி அலுவலகத்தை உடன் அணுகி இலவசமாக தென்னங்கன்றுகளை பெறலாம் என கூறினார்.நிகழ்ச்சி ஏற்பாடுகளை பாபநாசம் வேளாண்மை உதவி இயக்குனர் சுஜாதா, வேளாண்மை உதவி அலுவலர்கள் குரு. சரவணன், சதீஷ்குமார் ஆகியோர் செய்து இருந்தனர்.


Next Story