ஒருங்கிணைந்த வளர்ச்சி வேளாண் திட்டத்தில் தென்னங்கன்றுகள்


ஒருங்கிணைந்த வளர்ச்சி வேளாண் திட்டத்தில் தென்னங்கன்றுகள்
x

ஒருங்கிணைந்த வளர்ச்சி வேளாண் திட்டத்தில் தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டது.

வேலூர்

வேலூர் மாவட்டம், கணியம்பாடி ஒன்றியத்துக்கு உட்பட்ட துத்திப்பட்டு மற்றும் பாலாத்து வண்ணான் ஊராட்சிகளில் கலைஞர் அனைத்து கிராம வேளாண்மை ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டத்தின் கீழ், 450 பயனாளிகளுக்கு தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டன. துத்திப்பட்டு ஊராட்சியில் நடந்த நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். ஒன்றிய கவுன்சிலர் சீனிவாசன், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் மகேந்திரன், கணியம்பாடி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் கலைச்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை வேளாண்மை அலுவலர் கணேசன் வரவேற்றார்.

இதில் சிறப்பு அழைப்பாளர்களாக ஒன்றியக்குழு தலைவர் திவ்யாகமல்பிரசாத், துணைத் தலைவர் கஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு 300 பயனாளிகளுக்கு தலா 2 தென்னை மரக்கன்றுகள் வழங்கினர். இதேபோல் பாலாத்துவண்ணான் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் தலைமையில் 150 பயனாளிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. இதில் வேளாண்மை அலுவலர் சவுபாக்கியலட்சுமி, உதவி வேளாண்மை அலுவலர் ஜெய்சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story