பாசி நிதி நிறுவன மோசடி வழக்கில் குற்றவாளிக்கு 27 ஆண்டுகள் சிறை - கோவை கோர்ட்டு தீர்ப்பு
திருப்பூர் பாசி நிதி நிறுவன மோசடி வழக்கில் குற்றவாளிகளுக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி கோவை பொருளாதார குற்றப் பிரிவு கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.
சென்னை,
திருப்பூரில் உள்ள பாசி நிதி நிறுவனம் அதிக வட்டி தருவதாக கூறி பொதுமக்களிடம் இருந்து கோடிக்கணக்கில்முதலீடு பெற்றுமோசடி செய்தது.
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் இயக்குனர்கள் கே.மோகன்ராஜ், கதிரவன், கமலவள்ளி உள்ளிட்டோர் மீது திருப்பூர் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கு கோவை பொருளாதார குற்றப் பிரிவுக்கு கோர்டில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் பாசி நிதி நிறுவன மோசடி வழக்கில் இயக்குனர் கள்கமலவள்ளி, மோகன்ராஜ் ஆகியோரை குற்றவாளிகள் என அறிவித்த நீதிபதிகள், இருவருக்கும் 27 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.171.74 கோடி அபராதம் விதித்து தீர்ப்பு அளித்துள்ளது.
Related Tags :
Next Story