ஆண்டாள் கோவிலில் உண்டியல் எண்ணிக்கை
ஆண்டாள் கோவிலில் உண்டியல் எண்ணிக்கை பணி நடைபெற்றது.
விருதுநகர்
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் உள்ள உண்டியல்கள் நேற்று திறந்து எண்ணப்பட்டன. ஆண்டாள் கோவில் வளாகத்தில் உள்ள பெரிய பெருமாள் சன்னதி, சக்கரத்தாழ்வார் சன்னதி, பெரியாழ்வார் சன்னதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்ட 17 உண்டியல்கள் காணிக்கை எண்ணும் மையத்திற்கு கொண்டு வரப்பட்டது. இதையடுத்து காணிக்கை எண்ணும் பணி தொடங்கியது. இதில் ரூ.16 லட்சத்து 99 ஆயிரத்து 994 இருந்தது. தங்கம் 131 கிராம், வெள்ளி 226 கிராமும் இருந்தது. அதேபோல வெளிநாட்டு பணமும் இருந்தது. இதற்கான ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன் தலைமையில் கோவில் ஊழியர்கள் செய்து இருந்தனர். உண்டியல்கள் உதவி ஆணையர் கருணாகரன், நிர்வாக அதிகாரி முத்துராஜா, ஆய்வாளர் முத்து மணிகண்டன் ஆகியோர் முன்னிலையில் திறந்து எண்ணப்பட்டது.
Related Tags :
Next Story