அரசு கலை-அறிவியல் கல்லூரியில்கணித பேரவை விழா


அரசு கலை-அறிவியல் கல்லூரியில்கணித பேரவை விழா
x
திருப்பூர்


திருப்பூர் மாவட்டம் நத்தக்காடையூர் அருகே உள்ள முள்ளிப்புரம் காங்கயம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கணித பேரவை விழா நேற்று காலை நடைபெற்றது. கல்லூரி முதல்வர் சே.ப.நசீம் ஜான் தலைமை தாங்கினார். கணிதத்துறை தலைவர் பி.சீனிவாசன் முன்னிலை வகித்தார். இளங்கலை கணித துறை 3-ம் ஆண்டு மாணவி எச்.நஸ்ரின் வரவேற்று பேசினார்.

விழாவில் ஈரோடு மாவட்டம், நம்பியூர், திட்டமலை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் (பொறுப்பு) இ.தமிழ்மணி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கணித பயன்பாடுகள் என்ற தலைப்பில் கணித துறை வேலை வாய்ப்புகள், கணித கோட்பாடுகள், கணித வாழ்வியல் நடைமுறைகள் ஆகியவைகள் பற்றி பேசினார்.

தொடர்ந்து கல்லூரியில் இளங்கலை, முதுகலை கணிதம் பாடப்பிரிவுகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கவிதை, கட்டுரை, ஓவியம், வினாடி-வினா, கணித புதிர்கள், புகைப்படத்தின் பெயர் கூறுதல் மற்றும் கலை இலக்கிய போட்டிகள் நடத்தப்பட்டன. பின்னர் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு கேடயம், பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

 விழாவில் கல்லூரி பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் இளங்கலை 3-ம் ஆண்டு மாணவி கே.புனிதா நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை பேராசிரியர் பெ.செந்தில்குமார் செய்திருந்தார்.


Next Story