கல்லூரி மாணவர் பலி
திருப்பூர்
அவினாசி, ஜூன்.30-
திருப்பூர் அருகே 15 வேலம்பாளையத்தை சேர்ந்த கமலநாதன் மகன் மணிகண்டன் (வயது 18). இவர் திருப்பூர் அருகே தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வந்தார். இந்த நிலையில் கோவை மாவட்டம் அன்னூரிலிருந்து 15 வேலம்பாளையத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார். அவினாசியை அடுத்து கரையப்பாளையம் பிரிவு அருகே வந்தபோது எதிரில் வந்தவேன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட மணிகண்டன் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்த அவினாசி போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசேதனைக்காக அவினாசி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story