திண்டுக்கல் பஸ் நிலையத்தில் இடிந்து விழுந்த மேற்கூரை சிமெண்டு பூச்சு
திண்டுக்கல் பஸ் நிலையத்தில் நள்ளிரவில் மேற்கூரை சிமெண்டு பூச்சு இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல்
திண்டுக்கல் பஸ் நிலையத்தில் இருந்து வெளியூர்களுக்கு ஏராளமான பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதனால் பஸ் நிலையத்தில் எப்போதும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழியும். இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில், திண்டுக்கல்லில் இருந்து நத்தம் செல்லும் பஸ்கள் நிறுத்தப்படும் இடத்தில் மேற்கூரையின் சிமெண்டு பூச்சு திடீரென இடிந்து கீழே விழுந்தது. நள்ளிரவு நேரம் என்பதால் அப்பகுதியில் பயணிகள் நடமாட்டம் இல்லை.
இதனால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. ஒருவேளை பகல் நேரத்தில் சிமெண்டு பூச்சுகள் இடிந்து விழுந்திருந்தால் பயணிகள் காயமடைந்திருப்பார்கள். எனவே பஸ் நிலைய நடைமேடையின் மேற்கூரை உறுதித்தன்மையுடன் இருக்கிறதா? என்பதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story