பந்தலூர் அருகே இடிந்து விழும் நிலையில் குடிநீர் கிணறு-சீரமைத்துத்தர பொதுமக்கள் வலியுறுத்தல்


பந்தலூர் அருகே இடிந்து விழும் நிலையில் குடிநீர் கிணறு-சீரமைத்துத்தர பொதுமக்கள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 15 Feb 2023 12:15 AM IST (Updated: 15 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பந்தலூர் அருகே இடிந்து விழும் நிலையில் உள்ள குடிநீர் கிணற்றை சீரமைத்துத்தர வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளார்கள்.

நீலகிரி

பந்தலூர்

பந்தலூர் அருகே இடிந்து விழும் நிலையில் உள்ள குடிநீர் கிணற்றை சீரமைத்துத்தர வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளார்கள்.

ஆபத்தான கிணறு

பந்தலூர் தாலுகா எருமாடு அருகே மானூர் முத்துமாரியம்மன் கோவில் பகுதியில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகிறது. குடிநீர் வசதி இல்லாமல் அப்பகுதி மக்கள் அவதிபட்டு வந்தனர். இதையடுத்து ெபாதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கைக்கு பின் கடந்த ஓராண்டுக்கு முன்பு அங்கு கிணற்றுடன் கூடிய குடிநீர் திட்டம் அமைக்கப்பட்டது. இந்தநிலையில் தற்போது கிணற்றின் மேற்புறம் உள்ள 3 வளையங்கள் உடைந்து விழும் சூழல் நிலவுகிறது. மேலும், குடிநீர் இரைக்கும் போது வளையங்கள் தடதடவென ஆடுகிறது. இதனால் அந்த வளையங்கள் எப்போது வேண்டுமானாலும் உடைந்து கிணற்றுக்குள் விழும் அபாய நிலையில் உள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் குடிநீர் எடுத்துச் சென்று வருகின்றனர்.

சீரமைக்க வேண்டும்

இதனால் கிணற்றின் வளையங்களை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:- குடிநீர் வசதி இல்லாமல் நீண்ட நாட்களாக அவதிப்பட்டோம். இதனால் சம்பந்தபட்ட துறைக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் மனு கொடுத்தோம். அதன்படி பல லட்ச ரூபாய் மதிப்பீட்டில் குடிநீர் கிணறு ஓராண்டுக்கு முன்புதான் அமைக்கப்பட்டது. ஆனால் தற்போது வளையங்களில் விரிசல் ஏற்பட்டு கிணறு இடியும் நிலையில் உள்ளது. எனவே கிணற்றை சீரமைத்து புதிய வளையங்கள் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story