இடிந்து விழும் நிலையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி


இடிந்து விழும் நிலையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி
x

இடிந்து விழும் நிலையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது.

அரியலூர்

மீன்சுருட்டி:

இடிந்து விழும் அபாயம்

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் ஒன்றியத்தில் உள்ள காட்டகரம் கிராமத்தில் தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் ஒன்று முதல் 5-ம் வகுப்பு வரை அந்த பகுதியை சேர்ந்த மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியின் அருகே சுமார் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் மூலமாகத்தான், அந்த கிராமத்தை சேர்ந்த மக்களுக்கு தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பழுதடைந்து உள்ளதால், எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாயம் உள்ளது.

புதிதாக கட்ட வேண்டும்

மேலும் பள்ளியின் அருகே இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளநிலையில், திடீரென அந்த தொட்டி இடிந்து விழுந்தால் அசம்பாவிதங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே விபரீதம் ஏற்படும் முன் மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து, இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அப்புறப்படுத்த வேண்டும். மேலும் இந்த கிராமத்திற்கு புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை உடனடியாக அமைத்து தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story