விவசாயிகளிடம் பணம் வசூலிப்பதை தவிர்க்க நடவடிக்கை


விவசாயிகளிடம் பணம் வசூலிப்பதை தவிர்க்க நடவடிக்கை
x

நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் இருந்து பணம் வசூலிப்பதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

விருதுநகர்


நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் இருந்து பணம் வசூலிப்பதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

குறைதீர்க்கும் நாள் கூட்டம்

விருதுநகர் கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் கலெக்டர் மேகநாத ரெட்டி தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பயிர் விளைச்சல் போட்டியில் பரிசு பெற்ற விவசாயிகள் கவுரவிக்கப்பட்டனர். மேலும் 2020-2021-ம் நிதியாண்டில் விடுபட்ட பயிர் காப்பீட்டு தொகை 1,504 விவசாயிகளுக்கு ரூ. 3 கோடியே 37 லட்சத்து 93 ஆயிரத்து 671 விடுவிக்கப்பட்டுள்ளது.

2021 -2022-ம் நிதியாண்டு 1,574 விவசாயிகளுக்கு ரூ. 15 கோடியே 53 லட்சத்து 63 ஆயிரத்து 424 விடுவிக்கப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதத்தில் பெய்த எதிர்பாராத மழையினால் பாதிக்கப்பட்ட 13 விவசாயிகளுக்கு அரசிடமிருந்து பணம் விடுவிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.

மூடைக்கு ரூ.42 வசூல்

மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் மூடைக்கு ரூ. 42 வசூலிக்கப்படுவதாக புகார் தெரிவித்த விவசாய சங்க நிர்வாகி விஜய் முருகன் இதனை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

அதிகாரிகள் 4 நெல் கொள்முதல் நிலையங்களுக்கு விவசாயிகள் நெல் கொண்டு வரவில்லை என்று தெரிவித்தனர். அதற்கு விவசாயிகள் தரப்பில் கொள்முதல் நிலையங்களில் குவிண்டால் ரூ.2,160-க்கு கொள்முதல் செய்யும் நிலையில் வெளிச்சந்தையில் ரூ.2,210-க்கு கொள்முதல் செய்யப்படுவதால் அந்த பகுதியில் விவசாயிகள் நெல் கொண்டு வர வி ல்லை என தெரிவித்தனர்.

ஆக்கிரமிப்பு

விவசாயிகள் பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சி துறை கண்மாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டர் உத்தரவிட்டார். மேலும் விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுத்ததற்காக மாறுதலாகி செல்லும் கலெக்டர் மேகநாத ரெட்டிக்கு விவசாயிகள் தரப்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

கூட்டத்தில் பல்வேறு துறை மாவட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story