டிக்கெட் வாங்கவில்லை எனக்கூறி ரூ.500 வசூல்:பாதிக்கப்பட்ட பயணிக்கு ரூ.25 ஆயிரம் நஷ்டஈடு-நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையம் உத்தரவு
ஊட்டியில் அரசு பஸ்சில் பயணியிடம் டிக்கெட் வாங்கவில்லை என்று கூறி ரூ.500 ரூபாய் வசூலிக்கப்பட்ட விவகாரத்தில், பாதிக்கப்பட்ட பயணிக்கு ரூ.25 ஆயிரம் நஷ்ட ஈடு வழங்குமாறு நீலகிரி மாவட்ட நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.
ஊட்டி
ஊட்டியில் அரசு பஸ்சில் பயணியிடம் டிக்கெட் வாங்கவில்லை என்று கூறி ரூ.500 ரூபாய் வசூலிக்கப்பட்ட விவகாரத்தில், பாதிக்கப்பட்ட பயணிக்கு ரூ.25 ஆயிரம் நஷ்ட ஈடு வழங்குமாறு நீலகிரி மாவட்ட நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.
ஓய்வுபெற்ற வங்கி மேலாளர்
நீலகிரி மாவட்டம் ஊட்டி பர்ன்ஹில் பகுதியை சேர்ந்தவர் சேகர். இவர் வங்கியில் மேலாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இந்தநிலையில் சேகர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 10-ந்தேதி கோவையில் இருந்து அரசு பஸ்சில் ஊட்டிக்கு வந்து உள்ளார்.
இதற்கிடையே சேரிங்கிராஸ் பகுதியில் அந்த பஸ்சில் ஏறிய டிக்கெட் பரிசோதகர் பயணிகளிடம் டிக்கெட் வாங்கி சோதனை செய்த போது சேகர் தனது டிக்கெட்டை பையில் தேடி எடுக்க தாமதம் ஆகியுள்ளது.
ரூ500 அபராதம்
இதனையடுத்து சேகர் டிக்கெட் வாங்கவில்லை என்று கூறி பரிசோதகர் ரூ.500 அபராதம் விதித்தது உள்ளார். மேலும் அப்போது அவர்களுடைய வாக்குவாதம் ஏற்பட்டதால் டிக்கெட் பரிசோதகர் தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது.
இதனால் மன உளைச்சல் அடைந்த சேகர் ஊட்டியில் உள்ள மாவட்ட நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த ஆணையம் பாதிக்கப்பட்ட சேகரிடம் வசூலிக்கபட்ட ரூ.500 ரூபாயை திருப்பி அளிக்க வேண்டும், நீதிமன்ற செலவாக 3 ஆயிரத்தையும் மன உளைச்சல் அடைந்ததால் ரூ.25 ஆயிரம் ரூபாயை நஷ்டஈடாகவும் வழங்குமாறு நீலகிரி மாவட்ட போக்குவரத்து கழக மேலாளருக்கு உத்தரவிட்டு தீர்ப்பு வழங்கப்பட்டது.