மண் மாதிரி சேகரிக்கும் பணி மும்முரம்


மண் மாதிரி சேகரிக்கும் பணி மும்முரம்
x

மண் மாதிரி சேகரிக்கும் பணி மும்முரம்

திருப்பூர்

போடிப்பட்டி

உடுமலை வட்டார விவசாய நிலங்களில் மண் மாதிரிகள் சேகரிக்கும் பணிகளில் வேளாண்மை உழவர் நலத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

மண் வளம்

மகசூலைத் தீர்மானிக்கும் மிக முக்கிய காரணியாக மண் வளம் உள்ளது. மண்ணிலுள்ள சத்துக்களின் அளவைத் தெரிந்து கொள்வதன் மூலம் மேலும் என்னென்ன பயிர் சாகுபடிக்கு என்னென்ன சத்துக்கள் தேவை என்பதை அறிந்து கொள்ள முடிகிறது. ஒவ்வொரு பயிர் சாகுபடியின் போதும் மண்ணிலுள்ள சத்துக்களை உறிஞ்சி பயிர் வளர்வதால் அறுவடைக்குப் பிறகு மண் வளம் குறைவது இயல்பாக நடக்கும் விஷயமாகும். இதுதவிர மழைக்காலங்களில் ஏற்படும் மண் அரிப்பு, நீர் கரையோட்டம் மற்றும் சத்துக்கள் ஆவியாதல் போன்ற காரணங்களினாலும் மண்வளம் குறையும். எனவே மண் பரிசோதனை செய்து தேவையான அளவில் ஊட்டச் சத்துக்களை மண்ணுக்கு வழங்க வேண்டிய கட்டாயம் உள்ளது. இந்தநிலையில் ஒவ்வொரு பகுதியிலும் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மூலம் பொதுவான மண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அந்த பகுதியின் மண்ணின் தன்மை மற்றும் மண் வளத்தை மேம்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து அறிந்து கொள்வது பயனுள்ளதாக இருக்கும்.

அந்தவகையில் உடுமலை வட்டாரத்தில் கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட கிராமங்களில் மண் மாதிரிகள் சேகரிக்கும் பணிகள் நடைபெற்றது. இதுகுறித்து உடுமலை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் தேவி கூறியதாவது:-

சத்துகள்

கண்ணமநாயக்கனூர், கணக்கம்பாளையம், சின்னவீரன்பட்டி, சின்னகுமாரபாளையம் உள்ளிட்ட 12 ஊராட்சிகளில் நன்செய் நிலங்களில் சுமார் 6 ஏக்கருக்கு ஒரு மண்மாதிரியும், புன்செய் நிலங்களில் சுமார் 25 ஏக்கருக்கு ஒரு மண் மாதிரியும் என அனைத்து புல எண்களும் முடிவடையும் வகையில் மாதிரிகள் சேகரிக்கப்படுகிறது.இந்த கிராமங்களில் மண் மாதிரிகள் சேகரிப்பு மட்டுமல்லாமல் அடிப்படை புள்ளி விபரங்களும் சேகரிக்கப்பட்டு வருகிறது.இதன்மூலம் விவசாயிகளின் தேவைகள் அறிந்து திட்டங்கள் மேற்கொள்வதற்கு உதவியாக இருக்கும்.மேலும் சேகரிக்கப்படும் மண் மாதிரிகளை ஆய்வு செய்வதன் மூலம் மண்ணில் உள்ள சத்துக்களுக்கு ஏற்ற வகையில் உரப் பரிந்துரைகளை வழங்க முடியும்.இதன் மூலம் உரச் செலவைக் கட்டுப்படுத்த முடியும்'என்று அவர் கூறினார்.தின்னப்பட்டியில் நடந்த மண் மாதிரி சேகரிப்பில் வேளாண்மை உதவி இயக்குனர் தேவி, உதவி வேளாண்மை அலுவலர் மார்க்கண்டன், அட்மா திட்டப் பணியாளர்கள் மற்றும் பெரியநாயக்கன்பாளையம் தனியார் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.



Next Story