பட்டாசு கடையில் வசூல்: போலீஸ் ஏட்டு ஆயுதப்படைக்கு மாற்றம்
பட்டாசு கடையில் வசூல் தொடர்பான புகாரில், போலீஸ் ஏட்டு ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.
சேலம்
சேலம் அம்மாபேட்டை போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருபவர் கண்ணையன் (வயது 45). இவர் தீபாவளி பண்டிகையையொட்டி அம்மாபேட்டை பகுதியில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட பட்டாசு கடை ஒன்றில் வசூலில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. மேலும் இதை சிலர் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர்.
இதுகுறித்து விசாரணை நடத்த உதவி கமிஷனர் சரவணகுமரனுக்கு துணை கமிஷனர் உத்தரவிட்டார். இதையடுத்து விசாரித்து அவர் கொடுத்த அறிக்கையின் அடிப்படையில் பட்டாசு கடையில் வசூலில் ஈடுபட்ட ஏட்டு கண்ணையனை ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து துணை கமிஷனர் மாடசாமி உத்தரவிட்டார். மேலும் துறை ரீதியான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
Related Tags :
Next Story