தனியார் நிறுவனத்தில் வசூல் பணம் மோசடி:ஊழியர் கைது


தனியார் நிறுவனத்தில் வசூல் பணம் மோசடி:ஊழியர் கைது
x
தினத்தந்தி 6 Jan 2023 12:15 AM IST (Updated: 6 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

ஸ்பிக்நகரிலுள்ள தனியார் நிறுவனத்தில் வசூல் பணம் மோசடி செய்த ஊழியர் கைது செய்யப்பட்டார்.

தூத்துக்குடி

ஸ்பிக்நகர்:

தூத்துக்குடி சிதம்பரநகரச் சேர்ந்தவர் சஜன். இவர் ஸ்பிக்நகரில் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை நிறுவனத்தை நடத்தி வருகிறார். இங்கு தூத்துக்குடி 3 சென்ட் பகுதி சேகர் மகன் டைமன்ராஜ் என்பவரும், ஊரணி ஒத்தவீடு முத்துஇருளன் மகன் பாக்கியராஜ் (33) என்பவரும் கடந்த ஒரு வருடமாக வேலை பார்த்து வந்துள்ளனர். இந்த நிலையில் டைமண்ட் ராஜ் பொருட்கள் விற்பனை செய்த வசூல்பணம் ரூ.30 ஆயிரத்தையும், நிறுவனத்தில் வாங்கிய முன்பணம் ரூ.10ஆயிரத்தையும் மோசடி செய்து விட்டாராம். அதுபோல பாக்கியராஜ் பொருட்களை விற்பனை செய்த வசூல் பணம் ரூ.35 ஆயிரம், நிறுவனத்தில் வாங்கிய முன்பணம் ரூ.25 ஆயிரம் ஆக மொத்தம் 60 ஆயிரத்தை மோசடி செய்து விட்டாராம். இது குறித்த புகாரின் பேரில் முத்தையாபுரம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சேட்டைநாதன் வழக்குப்பதிவு செய்து பாக்கியராஜை கைது செய்தார். தலைமறைவாக உள்ள டைமண்ட் ராஜை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story