பனை விதைகள் சேகரிக்கும் பணி


பனை விதைகள் சேகரிக்கும் பணி
x
தினத்தந்தி 27 Aug 2023 12:15 AM IST (Updated: 27 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கோட்டூர் அருகே பனை விதைகள் சேகரிக்கும் பணியை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தொடங்கி வைத்தார்.

திருவாரூர்

கோட்டூர்:

கோட்டூர் அருகே பனை விதைகள் சேகரிக்கும் பணியை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தொடங்கி வைத்தார்.

பனை விதைகள் சேகரிக்கும் பணி

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி தமிழக கடற்கரையோரங்களில் தமிழ்நாடு பனை தொழிலாளர்கள் நல வாரியம், கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பு, நாட்டு நலப்பணித்திட்டம் ஆகிய அமைப்புகள் இணைந்து முன்னெடுக்கும் ஒரு கோடி பனை விதைகள் நடும் பணிக்கான பனை விதைகள் சேகரிக்கும் முகாம் தமிழக முழுவதும் இன்று(ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

இதனையொட்டி திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே காரியமங்கலம் கிராமத்தில் பனை விதைகள் சேகரிக்கும் பணி நடந்தது. இந்த பணியை தமிழக தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தொடங்கி வைத்தார்.

1 லட்சம் தன்னார்வலர்கள்

பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆணைப்படி தமிழ்நாட்டின் பசுமை பரப்பை 33 சதவீதம் உயர்த்த கடலோர மாவட்டங்களில் ஒரு கோடி பனை விதைகள் நடும் பணியை கிரீன் நீடா அமைப்பு முன்னெடுத்துள்ளது.

இதில் ஒரு லட்சம் தன்னார்வலர்கள் பங்கேற்க உள்ளனர். இந்த பணி கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி நடத்தப்படுகிறது.

தமிழகம் முழுவதும் 14 மாவட்டங்களில் இன்று தொடங்கி 7 நாட்கள் பனை விதைகள் சேகரிக்கப்படுகிறது.

14 கிலோ மீட்டர் தூரம்

இவ்வாறு சேகரிக்கப்படும் ஒரு லட்சம் பனை விதைகளும் சென்னை முதல் கன்னியாகுமரி வரை சுமார் ஆயிரத்து 14 கிலோமீட்டர் தூரத்திற்கு விதைக்கப்பட உள்ளது. இது ஒரு கின்னஸ் சாதனை நிகழ்ச்சியாக அமைய உள்ளது. பனைமரங்கள் வெட்டுவது சட்டவிரோத செயல். பனைமரங்கள் வெட்டுவதை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் மக்கள் பிரதிநிதிகள், பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Next Story