கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் உண்டியல் மூலம் ரூ.26½ லட்சம் வசூல்


கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் உண்டியல் மூலம் ரூ.26½ லட்சம் வசூல்
x
தினத்தந்தி 3 Dec 2022 12:15 AM IST (Updated: 3 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் உண்டியல் மூலம் ரூ.26½ லட்சம் வசூலானது.

கன்னியாகுமரி

கன்னியாகுமரி:

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தும் வகையில் கோவில் நிர்வாகம் சார்பில் 17 உண்டியல்கள் கோவில் வளாகத்தில் வைத்துள்ளனர்.

இந்த உண்டியல்கள் அனைத்தும் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை திறந்து எண்ணப்படுவது வழக்கம். அதே போல் அனைத்து உண்டியல்களும் நேற்று திறந்து எண்ணப்பட்டன. குமரி மாவட்ட கோவில்களின் இணை ஆணையர் ஞானசேகர் தலைமையில், உதவி ஆணையர் தங்கம் முன்னிலையில், ஆய்வாளர் தர்மேந்திரா, தேவசம் தொகுதி கண்காணிப்பாளர் மற்றும் மேலாளர் ஆனந்த், கோவில் பொருளாளர் ரமேஷ், கோவில் பணியாளர்கள், ஆதி பராசக்தி மன்றத்தினர் மற்றும் பக்தர்கள் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இதில் ரூ.26 லட்சத்து 73 ஆயிரத்து 480 வசூலாகி இருந்தது. தங்கம் 46.380 கிராம், வெள்ளி 102.380 கிராம் மற்றும் வெளிநாட்டு பணம் கிடைத்து இருந்தது.


Next Story