உண்டியல் காணிக்கை மூலம் ரூ.4 லட்சம் வசூல்


உண்டியல் காணிக்கை மூலம் ரூ.4 லட்சம் வசூல்
x
தினத்தந்தி 28 Sept 2023 12:15 AM IST (Updated: 28 Sept 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் உண்டியல் காணிக்கை மூலம் ரூ.4 லட்சம் வசூலானது.

கன்னியாகுமரி

மணவாளக்குறிச்சி:

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் உண்டியல் காணிக்கை மூலம் ரூ.4 லட்சம் வசூலானது.

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக 9 நிரந்தர உண்டியல்கள் மற்றும் 6 குடங்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில் நேற்று கோவிலில் உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது. இதில் கன்னியாகுமரி மாவட்ட திருக்கோவில்கள் தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், இணை ஆணையர் ரத்தினவேல் பாண்டியன், உதவி ஆணையர் தங்கம், ஆய்வாளர் செல்வி, கோவில் ஸ்ரீகாரியம் செந்தில் குமார் மற்றும் கோவில் ஊழியர்கள், லெட்சுமிபுரம் கலைக்கல்லூரி என்.எஸ்.எஸ். மாணவிகள், பொதுமக்கள் முன்னிலையில் உண்டியல் திறந்து எண்ணப்பட்டது. இதில் வருமானமாக ரூ.4 லட்சத்து 9 ஆயிரத்து 325-ம், தங்கம் 12.8 கிராம், வெள்ளி 45 கிராம் மற்றும் வெளிநாட்டு நாணயங்களும் கிடைத்தன.


Next Story