அன்னதான உண்டியல் மூலம் ரூ.93 ஆயிரம் வசூல்


அன்னதான உண்டியல் மூலம் ரூ.93 ஆயிரம் வசூல்
x
தினத்தந்தி 2 April 2023 12:15 AM IST (Updated: 2 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் அன்னதான உண்டியல் மூலம் ரூ.93 ஆயிரம் வசூல்

கன்னியாகுமரி

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு தினமும் ஏராளமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் சாமி தரிசனம் செய்ய வருகிறார்கள். அவ்வாறு வரும் பக்தர்களுக்கு மதிய வேளையில் கோவிலில் அன்னதானம் வழங்கும் வகையில் தமிழக அரசு அன்னதான திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதற்கான நிதி திரட்ட கோவிலில் அன்னதான உண்டியல் வைக்கப்பட்டுள்ளது.

இந்த உண்டியல் மாதத்திற்கு ஒரு முறை திறந்து எண்ணப்படுவது வழக்கம். அதுபோல் நேற்று முன்தினம் அன்னதான உண்டியல் திறந்து எண்ணப்பட்டது. இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் சுஜித் தலைமை தாங்கினார். நாகர்கோவில் தேவசம் தொகுதி கண்காணிப்பாளரும், பகவதி அம்மன் கோவில் மேலாளருமான ஆனந்த், பொருளாளர் கண்ணதாசன் முன்னிலையில் கோவில் பணியாளர்கள் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இதில் வருமானமாக ரூ.93 ஆயிரத்து 39 வசூலாகியுள்ளது.


Next Story