நாமக்கல்லில் பெண் கல்வி குறித்த ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் கலெக்டர் ஸ்ரேயா சிங் தலைமையில் நடந்தது


நாமக்கல்லில்  பெண் கல்வி குறித்த ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்  கலெக்டர் ஸ்ரேயா சிங் தலைமையில் நடந்தது
x

நாமக்கல்லில் பெண் கல்வி குறித்த ஒருங்கிணைப்புக்குழு கூட்ட் கலெக்டர் ஸ்ரேயா சிங் தலைமயில் நடந்தது.

நாமக்கல்

நாமக்கல்லில் பெண் கல்வி குறித்த ஒருங்கிணைப்புக்குழு கூட்ட் கலெக்டர் ஸ்ரேயா சிங் தலைமயில் நடந்தது.

குழந்தை திருமணம்

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டம் குறித்த மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் ஸ்ரேயாசிங் தலைமை தாங்கினார். இதில் பெண் குழந்தைகளின் கல்வியை மேம்படுத்துதல், குழந்தை திருமணங்கள் நடைபெறாத நிலையை உருவாக்குதல், பெண் குழந்தைகளின் பாதுகாப்பிற்கு அரசு செய்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விளம்பரப்படுத்துதல், தாயின் கருவில் உள்ள சிசுவின் பாலினம் குறித்து விவரம் வெளியிடும் ஸ்கேன் சென்டர்கள் மீது சட்ட நடவடிக்கைகளை தீவிரமாக அமல்படுத்துதல் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடன் கலெக்டர் ஆலோசனை நடத்தினார்.

கூட்டத்தில் கலெக்டர் ஸ்ரேயாசிங் பேசியதாவது-

பள்ளிகளில் மாணவிகளின் வருகையை கண்காணிக்க வேண்டும். ஓரிரு நாட்களுக்கு மேல் பள்ளிக்கு வராத மாணவிகளின் பெற்றோரிடம், அதற்கான விவரங்களை கேட்டறிந்து மாவட்ட நிர்வாகத்திற்கு தெரியப்படுத்த வேண்டும். குழந்தை திருமணம் செய்யும் ஆண்களுக்கும், அதற்கு உடந்தையாக இருப்போருக்கும் 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்படும். இந்த விவரங்களை ஆசிரியர்கள், ஊராட்சி தலைவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தெரியப்படுத்தி, குழந்தை திருமணம் நடைபெறாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஊக்கத்தொகை

அங்கன்வாடி பணியாளர்கள், கிராம சுகாதார செவிலியர்கள் தங்கள் பகுதியில் கர்ப்பிணித்தாய்மார்களின் விவரங்களை சேகரிப்பதோடு, அவர்கள் மகப்பேறு சிகிச்சை மேற்கொண்டார்களா அல்லது கருகலைப்பு செய்தார்களா என்பதை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். ஆண், பெண் பாலின விகிதத்தில் சம நிலையை தொடர்ந்து உருவாக்கும் சுகாதார செவிலியர் மற்றும் அங்கன்வாடி பணியாளர்களை மாவட்ட நிர்வாகம் சிறப்பிப்பதோடு, பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் கீழ் அவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட சமூகநல அலுவலர் கீதா, மாவட்ட திட்ட அலுவலர் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டம் பரிமளாதேவி, மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் சதீஸ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சீனிவாசன் உள்பட அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story