தேசிய வளையப்பந்து போட்டியில் நாமக்கல் வீரர், வீராங்கனைகளுக்கு தங்கப்பதக்கம் கலெக்டர் ஸ்ரேயா சிங்கிடம் வாழ்த்து பெற்றனர்

தேசிய வளையப்பந்து போட்டியில்  நாமக்கல் வீரர், வீராங்கனைகளுக்கு தங்கப்பதக்கம்  கலெக்டர் ஸ்ரேயா சிங்கிடம் வாழ்த்து பெற்றனர்
x

தேசிய வளையப்பந்து போட்டியில் நாமக்கல் வீரர், வீராங்கனைகளுக்கு தங்கப்பதக்கம் கலெக்டர் ஸ்ரேயா சிங்கிடம் வாழ்த்து பெற்றனர்

நாமக்கல்

இந்திய வளையப்பந்து கூட்டமைப்பு மற்றும் கேரள வளையப்பந்து கழகம் ஆகியவை இணைந்து 24-வது தென் மண்டல சீனியர் தேசிய வளையப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியை கேரள மாநிலம் கோட்டயத்தில் உள்ள உள்விளையாட்டு அரங்கில் 3 நாட்கள் நடத்தின. இதில் தென் மண்டலத்தில் உள்ள தமிழகம், கேரளா, புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் இருந்து 12-க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் கலந்து கொண்டன.

குழு, தனிநபர் மற்றும் கலப்பு இரட்டையர் போட்டி மற்றும் லீக் முறைப்படி நடைபெற்றன. தனிநபர், கலப்பு இரட்டையர் பிரிவில் தமிழக அணி சார்பில் கலந்து கொண்ட நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த வீரர் மற்றும் வீராங்கனைகள் அபிஷேக், மேனகா, ரம்யா, சிவானி ஆகியோர் தங்கம், வெள்ளி, வெண்கல பதக்கங்கள் வென்று தமிழகம் மற்றும் நாமக்கல் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்து உள்ளனர்.

வெற்றி பெற்ற நாமக்கல் மாவட்ட வீரர் மற்றும் வீராங்கனைகள் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங்கை நேற்று நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் கோகிலா, வளையப்பந்து பயிற்சியாளர் விஸ்வநாதன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story