மக்கள் தொடர்பு முகாமில்275 பேருக்கு நலத்திட்ட உதவிகள்


மக்கள் தொடர்பு முகாமில்275 பேருக்கு நலத்திட்ட உதவிகள்
x
திருப்பூர்


சேவூர் அருகே கானூர்புதூரில் உள்ள திருமண மண்டபத்தில் மக்கள் தொடர்பு முகாம் கலெக்டர் வினீத் தலைமையில் நடைபெற்றது. வருவாய்த்துறையின் சார்பில் 12 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகையும், ஒரு பயனாளிக்கு விதவை உதவி தொகையும், ஆதரவற்ற விதவை உதவித்தொகை 4 பயனாளிகளுக்கும் மற்றும் சிறு, குறு விவசாய சான்று, நத்தம் பட்டா மாறுதலுக்கான சான்று, குடும்ப அட்டை, சிறுதொழில் செய்ய கடனுதவி உள்பட மொத்தம் 275 பேருக்கு ரூ.28.68 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

இதைதொடர்ந்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை கலெக்டர் வினீத் பெற்றுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில், சப்- கலெக்டர் ஸ்ருதன் ஜெய்நாராயணன், இணை இயக்குனர் (வேளாண்மை) மாரியப்பன், சமூக பாதுகாப்புத்திட்ட தனி துணை கலெக்டர் அம்பாயிரநாதன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ரவிச்சந்திரன், மாவட்ட வழங்கல் அலுவலர் எஸ்.மகாராஜ், மரகதம் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.


Next Story