ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரியில் தமிழக அரசின் சாதனை புகைப்பட கண்காட்சி- கலெக்டர் தொடங்கி வைத்தார்

ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரியில் தமிழக அரசின் சாதனை புகைப்பட கண்காட்சி- கலெக்டர் தொடங்கி வைத்தார்
x

ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரியில் தமிழக அரசின் சாதனை புகைப்பட கண்காட்சி- கலெக்டர் தொடங்கி வைத்தார்

ஈரோடு

ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரியில், 'ஓயா உழைப்பின் ஓராண்டு கடைக்கோடி தமிழர்களின் கனவுகளை தாங்கி' என்ற தலைப்பில் தமிழக அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்த சிறப்பு புகைப்பட கண்காட்சி, விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் மற்றும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கி புகைப்பட கண்காட்சி மற்றும் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து அவர் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் ஏ.ஜி.வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ., மாநகராட்சி துணை மேயர் செல்வராஜ், ஆர்.டி.ஓ. சதீஷ்குமார், வேளாண்மைத்துறை இணை இயக்குனர் சின்னசாமி, மகளிர் திட்ட இயக்குனர் கெட்சி லீமா அமலினி, மாவட்ட சமூக நல அலுவலர் சண்முகவடிவு உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.

Next Story