மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்களை எரிக்காமல் போகி பண்டிகை கொண்டாட கலெக்டர் அறிவுறுத்தல்


மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்களை எரிக்காமல் போகி பண்டிகை கொண்டாட கலெக்டர் அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 13 Jan 2023 12:15 AM IST (Updated: 13 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரி:

தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் நகராட்சி பகுதிகளில் புகையில்லா போகி பண்டிகை கொண்டாட வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்படுகிறது. மேலும் பிளாஸ்டிக் பொருட்களை எரிக்காமல், அவற்றை சேகரித்து மறுசுழற்சி மையத்திற்கு அனுப்ப வேண்டும். புகையில்லா போகி பண்டிகையை கொண்டாடி சுற்றுச்சூழலை பாதுகாக்க அனைத்து பொதுமக்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story